Thursday, December 9, 2010

ட்வீட்டர் கதைகள்.

மதுரை மாட்டுதாவனி பஸ் நிலையத்தின் ஓரத்தில் உள்ள நவீன கட்டண கழிப்பறையில் தன் 'அவசரத்தை' முடித்து பாபு மூக்கை பிடித்து கொண்டே வெளியே வந்தான்.

பாபு: "உள்ளே கப்பு தாங்க முடியல,ஒரே கலிஜ்ஜா இருக்கு,ஒன்னுமே சுத்தமா இல்ல, என்னபா நவீன கட்டண கழிப்பறைன்னு போர்டு போட்டிருக்கு ஆனா உள்ளே ஒரு நவீனமும் இல்லயே?"

கழிப்பறை காவலாளி: "சார் நாங்க கம்பியூட்டரில் பில் தருகிறோம் சார்".

தன் முன்னால் உள்ள மிசினில் intime ,outime, Rs,பதித்து '*' பட்டனை பிரஸ் செய்து பில்லை பாபுவிடம் நீட்டினான்.

*********************************************************************************************
'state level rhythms singing Competitions for L.K.G' க்காக 'லதாவும்' அவளின் 5 வயது மகள் அனுவும் கம்பியூட்டர் முன் உட்கார்ந்து எப்படியாது 'prize' வாங்க வேண்டும் என்று பல ரெய்ம்ஸ் சை downloading பண்ணி கொண்டிருந்தனர்.

லதா: "அனு சீக்கரம் சீக்கரம் வித்தியாசமான் 10 ரெய்ம்ஸ் சை downloading பண்ணி நாளைக்குள்ள மன்ப்பாடம் செய்ய வேண்டும்".

4 மணி நேரமாக downloading பண்ணி,பண்ணி அலுத்த போன அந்த சின்ன குழந்தை தன் அம்மாவிடம் மெதுவாக தன் அழகான கண்கள் விரிய மழழை மொழியில் கேள்வி கேட்டது

அனு: "மம்மி இப்படிதான் என்னையும் கம்பியூட்டரில் இருந்து downloading பன்னுனியா"???

*******************************************************************************************
அமெரிக்காவில் உயர்ந்த சம்பளத்தில் பணி புரியும் க்ம்பியூட்டர் இஞ்சினியர் ராமுக்கு அவசரமாக அவன் அப்பா இறந்தது பற்றி போன் வந்தது.

கம்பெனில லீவு அப்பளை பன்னனும்,flight ticket reserve பன்னனும்..... சே என்னடா technology online video conference மூலமாக செத்த காரியம் எல்லாம் செய்ற மாதிரி வரனும்,அப்படி இல்ல வெப் சைட் மூலமாக இறந்தவர்களிடம் தொடர்பு கொள்ள வேண்டும்.

அப்பா இறந்த துக்கத்தையும், technology யும் தொடர்பு படுத்தி அவன் யோசிக்க ஆரம்பித்தான்.....

**************************************************************************************

தமிழ்நாடு கவர்மெண்ட் அறிவித்த அடுத்த இலவச விளம்பரம் மக்களை குஷி அடைய செய்தது. நம்ம மாட சாமி கால் கடுக்க ரேசன் கியூவில் நின்று அந்த இலவச குட்டி laptop பை பெற்றுக்கொண்டான்.

அந்த குட்டி laptop உடன் டாஸ்மாக் சென்று நல்ல உயர்ந்த சரக்கு அடித்து காசுக்கு பதிலாக laptop க்டையில் கொடுத்து விடுவது என்று மாட சாமியின் எண்ணம்.

அவன் கையில் காசு இல்லை, மேலும் laptop Rs 20,000 பெரும் என்று எல்லோரும் பேசிக்கொண்டாகள். டாஸ்மாக்கில் நல்ல குடித்து விட்டு காசுக்கு பதிலாக laptop கொடுத்தான்.

"தம்பி ஏற்கனவே இங்க இந்த மாதிரி 100 laptop வந்துருச்சு இனிமே இதல்லொம் வேண்டாம் நீ காச எடு".........

**************************************************************************************

Saturday, October 30, 2010

மாப்பு...பக்கத்து இலையில் பாயாசத்தை ஊத்து........

நாம் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களில் ஒன்று நம்ம வீட்டு திருமண விழாக்கள்.

எனக்கும் திருமண விழாக்களில் கலந்து கொள்வது மிகவும் பிடித்த விசயம்.

தூரத்து சொந்த பந்தம், மாமா மச்சான் கல்யாணம்,நம்ம கூட பிறந்த அண்ணன், தம்பி, அக்கா, தங்கை கல்யாணம, என் நண்பர்கள் கல்யாணம் என ஒன்று கூட விடமா கலந்து கொள்வேன்.

வெளியூர் திருமண விழாக்கள் என்றால் எந்த சாக்கு போக்கு சொல்லாமல் முடிந்த மட்டும் கலந்து கொள்வேன்.

உள்ளூர் திருமண விழாக்கள் அதுவும் close realtives என்றால் இந்த மொக்க ராசா ஓடி ஆடி வேலை செய்வது வழக்கம். திருமண முதன் நாள் நண்பகல் வேளையில் கல்யாண மண்டபம் புகுந்து முதல் வேலையாக சமையில் அறையில் என்ன நடக்கிறது என்று கவனிப்பது என் பழக்கம்.

அதானல் தான் என்னவோ கல்யாண சமையலை கவனிக்கும் பொறுப்பு பொதுவாக என்னிடம் வந்துவிடும்.சமையல் வேலை ஆட்கள் கேட்கும் அரிசி, பருப்பு, மளிகை, காய்கறிகள் , எண்ணைய் மற்றும் கல்யாண பந்தி அனைத்தையும் கவனித்து கொள்வேன்.

திருமண விழாக்களில் கல்யாண சாப்பாடு நன்றா இருக்க வேண்டும் மேலும் விழுந்து,விழுந்து உபசரிக்க வேண்டும்,இல்லையென்றால் என் தென் தமிழக மக்கள் கல்யாண வீட்டாரை தங்களுக்கு தெரிந்த கெட்ட வார்த்தையால் அர்ச்சனை செய்வது வழக்கம்.சில சமயம் மண்டபத்திலேயே கட்டி உருண்டு சண்டை போடுவார்கள்.

அதானல் தான் கல்யாண வீட்டார் கடன,உடன வாங்கி சீரும் , சிறப்புமாக கல்யாணத்தை முடிக்கிறார்கள் போலும்....

இந்த சொந்த பந்தை சரி செய்ய இல்ல அவர்கள் முன் தங்கள் வசதியை காட்ட இந்தியாவில் உள்ள மொத்த மக்களும் கல்யாணத்திற்க்காக 36,000 கோடி ஒரு வருடத்திற்கு செலவு செய்கிறார்கள் என்று ஒரு சர்வே கூறுகிறது. நம்புங்கள் நண்பர்களே நகை,ஆடை,மைக்&சீரியல் செட்,சாப்பாடு,வாகன வசதி, அலங்காரம் மற்றம் சில ஆடம்பர செலவுகள் சேர்த்து 36,000 கோடி அம்மாடியோவ்!!!

எந்த டுபுக்கு டா சொன்னான் இந்தியா ஏழை நாடு என்று ??

நான் சொல்ல வந்த விசயம் வேறு .... கல்யாண பந்தியில் மக்களின் சாப்பாடு இரசனையை எழுத தனி பதிவு வேண்டும்.சில பேர் பாயாசத்தில் அப்பளம்,வடையை கலந்து உருப்....உருப் என்று குடிப்பது வழக்கம்.

அன்னைக்கு அப்ப்டிதான் ஒருத்தன் பாயாசத்தில் ஜீலேபியை பிச்சு போட்டு , கூழ் மாதிரி ஆக்கி வழித்து வழித்து இலையை துடைத்து கொண்டிருந்தார்.
டேய் இது என்னடா டேஸ்ட் என்று கேட்க மனம் எத்தனித்தது.மனிதர்களுக்கு வெவ்வெறான குண்ங்கள் போல் வெவ்வெறான சுவைகள்....

பந்தி முடித்து இலை எடுக்கும் போது நான் கவனித்த விசயம் .... சாப்பாட்டை வீணாக்குவது, இலையில் போடப்பட்ட உணவுகள் பெரும்பாலும் பாதி சாப்பிடாமல் குப்பையில் வீசப்படுகிறது.

25 கிலோ அரிசி வாங்கி சாதம் சமைத்தால் குறைந்தது 4 கிலோ அரிசி சாதம் குப்பையில் வீசப்படுகிறது. ஒரு கல்யாண்த்திற்க்கே இவ்வள்வு என்றால் முகூர்த்த நாள் அன்று 50 திருமணங்கள் நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம் 200 கிலோ சாதம் வீணாக குப்பையில் வீசப்படுகிறது.உண்மையில் இந்த எண்ணிக்கை கூடும்.

office -ல் அடிக்கடி மதிய உணவுக்கு ஹோட்டலை தேடி செல்லவது உண்டு பல சமயம் dutch treat போவதுண்டு (அர்த்தம்-உன் சாப்பாட்டுக்கு நீ pay பண்ணிக்கோ என் சாப்பாட்டுக்கு நான் pay பண்ணிக்கிறேன்)

அங்கெயும் என் மனதை பாதித்த விசயம் உணவை வீணாக்குவது ,சில சமயம் கெட்ட கோவம் வந்து நண்பர்களை திட்டுவது உண்டு. நான் சாப்பாட்டு தட்டையோ இலையோ கறிவேப்பிலை கூட விடாமல்
துடைத்து வழித்து விடும் ரகம்.


இங்கே உள்ள வீடியோவை பாருங்கள் .



அன்னை தெரசா மாதிரி நம்மால் எதுவும் செய்ய முடியது, இல்ல செ குவேரா மாதிரி அராசங்கத்தை எதிர்த்து புரட்சி செய்ய நிச்சயம் முடியாது.அவ்வள்வு ஏன் லஞ்சம் கொடுக்காமல் ஒரு சான்றிதழ் கூட வாங்க முடியாது, இப்படி பல முடியாது இருந்தாலும் , நம்மால் முடிந்த ஒரே நல்ல காரியம். நாம் சாப்பிடும் உணவை வீணாக்காமல் இருப்பதே.
இதை நாமும் கடை பிடிப்போம் நம்மை சுற்றியுள்ள அனைவருக்கும் எடுத்து சொல்வோம்.

Tuesday, October 19, 2010

காணாமல் போனவர்கள்


குடும்ப பொருளாதாரத்திற்க்காக பெங்களுரில் வேலை பார்த்தாலும் பாழா போன மனசு சொந்த ஊரயே வட்டம் அடித்து கொண்டிருக்கும்.வார விடுமுறை நாட்களில் சொந்த ஊரான மதுரை சென்று பழைய நண்பர்களை சந்தித்து அவர்களோடு ஊர் சுற்றுவது எனக்கு மிகவும் பிடித்த விசயம்.இதில் ஏரியா,ஸ்கூல்,காலேஜ் என்று அனைத்து நண்பர்களும் அடக்கம்.நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து விட்டால் நாங்கள் செய்கிற லொள்ளு தாங்க முடியாது.

அப்படிதான் போன விடுமுறையில் நீண்ட நாட்களுக்கு பிறகு சுமராக 15 அல்லது 12 வருடங்களுக்கு பிறகு என்னுடைய உயர்-நிலை வகுப்பு தோழன் பால்பாண்டியை சந்திக்க நேர்ந்தது.எத்தனையோ தடவை அவன் வீட்டு வழியாக சென்று இருப்பேன்,அவனை பார்த்தது இல்லை.இந்த தடவை அவன் வீட்டு வழியாக சென்று போது ஒரு சப்தம்.

"டேய் மொக்க" திரும்பி பார்க்கிறேன்,ஒரு முரட்டு உருவம் என் பின்னால் நின்று என்னைக்
கூப்பிட்டது.

நான் யார் என்று யோசிக்கும் முன்னே
உருவம் பேசியது.

"டேய் மொக்க" என்ன தெரியலயா நான் தாண்ட பால்பாண்டி உன்னோடு ஸ்கூலில் படிச்சவண்டா".

என்னால் சட்டென்று அடையாள்ம காண முடியவில்லை.கடைசியாக இருவரும் பரஸ்பர விசாரிப்புகளுடன் 2 மணி நேரம் கழித்து அவனிடமிருந்து விடை பெற்றேன்.

அவனிடம் பேசியதில் இருந்து அவன் சென்னையில் ஒரு துணிகடையில் வேலை பார்கிறான் என்று தெரிந்து கொண்டேன்.

10 ம் வகுப்பு வரை எங்கூட தான் படித்தான்.நான் +1,+2 வேற ஸ்கூலில் சேர்ந்து தொடர்ச்சியாகக் காலெஜ்,வேலை தேடி, என்னமோ செட்டில் ஆகி அவனை முற்றிலும் மறந்து விட்டேன்.

இரவு படுத்தாலும் மனம் அவனைஅசை போட்டது.

உயர்-நிலை பள்ளியில் 6 -ம் வகுப்பிலிருந்து அவனோடு நல்ல பழக்கம். என்னை விட மிகவும் நன்றாக படிப்பான்.முதல் 5 -ரேங்க்கில் தான் எப்பொழும் இருப்பான்.

ஆனால் கால சுழற்சியில் 9 ம் வகுப்பு படிக்கும் போது அவனிடம் பெரிய மாற்றங்கள் தெரிந்தது,சிகரெட் குடிக்க அரம்பித்தான், வகுப்பை கட் அடித்து படம் பார்க்க போனான்.அதிக நேரம் பெண்களை பற்றி பேசினான்.10 ம் வகுப்பில் அவனுடைய இந்த செயல்கள் அதிகமாயின, நண்பர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் எவ்வளவோ எடுத்துரைத்தும் ஒன்னும் ஆகவில்லை.முடிவில் 10 ம் வகுப்பில் பெயில் ஆனான்.

என் நண்பன் பால்பாண்டி மாதிரி எத்தனையோ உதாரணங்களை அடுக்க முடியும்.

10-ம் வகுப்பில் state level first mark எடுத்தவர்கள்.12 ம் வகுப்பில் அதே மாதிரி எடுப்பதில்லை ஏன்?

12 ம்
வகுப்பில் state level first mark எடுத்து டாக்டராகி,மக்களுக்கு சேவை செய்வேன் என்று சொன்ன பல பேர் என்ன ஆனார்கள்??.

IAS exam எழுதி பாஸ் செய்தவர்கள், செய்தி தாள்களில் மக்களுக்கு சேவை செய்வேன் என்று சொன்ன பல பேர் அவ்வாறாக செய்துள்ளார்களா???


இதில் 70% சதவீதம் பேர் கால ஓட்டத்தில் காணாமல் போனாவர்கள் தான்.

ஏன் இவ்வாறு நடக்கிறது, கால வெள்ள ஓட்டத்தில் தன்னை நிலை நிறுத்தியவர்கள் வெகு சிலரே

வாழ்க்கையில் ஒரு தடவை ஜெயிப்ப்து எளிது,வாழ்க்கை முழுவதும் ஜெயித்து கொண்டே இருப்பது மிக அரிது.

இதில் யார் மீது குற்றம்,விதியின் மீது பழி போட என் மனசு
ஒத்துகொள்ளவில்லை.


பதிவுல நண்பர்களே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.