Tuesday, October 19, 2010

காணாமல் போனவர்கள்


குடும்ப பொருளாதாரத்திற்க்காக பெங்களுரில் வேலை பார்த்தாலும் பாழா போன மனசு சொந்த ஊரயே வட்டம் அடித்து கொண்டிருக்கும்.வார விடுமுறை நாட்களில் சொந்த ஊரான மதுரை சென்று பழைய நண்பர்களை சந்தித்து அவர்களோடு ஊர் சுற்றுவது எனக்கு மிகவும் பிடித்த விசயம்.இதில் ஏரியா,ஸ்கூல்,காலேஜ் என்று அனைத்து நண்பர்களும் அடக்கம்.நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து விட்டால் நாங்கள் செய்கிற லொள்ளு தாங்க முடியாது.

அப்படிதான் போன விடுமுறையில் நீண்ட நாட்களுக்கு பிறகு சுமராக 15 அல்லது 12 வருடங்களுக்கு பிறகு என்னுடைய உயர்-நிலை வகுப்பு தோழன் பால்பாண்டியை சந்திக்க நேர்ந்தது.எத்தனையோ தடவை அவன் வீட்டு வழியாக சென்று இருப்பேன்,அவனை பார்த்தது இல்லை.இந்த தடவை அவன் வீட்டு வழியாக சென்று போது ஒரு சப்தம்.

"டேய் மொக்க" திரும்பி பார்க்கிறேன்,ஒரு முரட்டு உருவம் என் பின்னால் நின்று என்னைக்
கூப்பிட்டது.

நான் யார் என்று யோசிக்கும் முன்னே
உருவம் பேசியது.

"டேய் மொக்க" என்ன தெரியலயா நான் தாண்ட பால்பாண்டி உன்னோடு ஸ்கூலில் படிச்சவண்டா".

என்னால் சட்டென்று அடையாள்ம காண முடியவில்லை.கடைசியாக இருவரும் பரஸ்பர விசாரிப்புகளுடன் 2 மணி நேரம் கழித்து அவனிடமிருந்து விடை பெற்றேன்.

அவனிடம் பேசியதில் இருந்து அவன் சென்னையில் ஒரு துணிகடையில் வேலை பார்கிறான் என்று தெரிந்து கொண்டேன்.

10 ம் வகுப்பு வரை எங்கூட தான் படித்தான்.நான் +1,+2 வேற ஸ்கூலில் சேர்ந்து தொடர்ச்சியாகக் காலெஜ்,வேலை தேடி, என்னமோ செட்டில் ஆகி அவனை முற்றிலும் மறந்து விட்டேன்.

இரவு படுத்தாலும் மனம் அவனைஅசை போட்டது.

உயர்-நிலை பள்ளியில் 6 -ம் வகுப்பிலிருந்து அவனோடு நல்ல பழக்கம். என்னை விட மிகவும் நன்றாக படிப்பான்.முதல் 5 -ரேங்க்கில் தான் எப்பொழும் இருப்பான்.

ஆனால் கால சுழற்சியில் 9 ம் வகுப்பு படிக்கும் போது அவனிடம் பெரிய மாற்றங்கள் தெரிந்தது,சிகரெட் குடிக்க அரம்பித்தான், வகுப்பை கட் அடித்து படம் பார்க்க போனான்.அதிக நேரம் பெண்களை பற்றி பேசினான்.10 ம் வகுப்பில் அவனுடைய இந்த செயல்கள் அதிகமாயின, நண்பர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் எவ்வளவோ எடுத்துரைத்தும் ஒன்னும் ஆகவில்லை.முடிவில் 10 ம் வகுப்பில் பெயில் ஆனான்.

என் நண்பன் பால்பாண்டி மாதிரி எத்தனையோ உதாரணங்களை அடுக்க முடியும்.

10-ம் வகுப்பில் state level first mark எடுத்தவர்கள்.12 ம் வகுப்பில் அதே மாதிரி எடுப்பதில்லை ஏன்?

12 ம்
வகுப்பில் state level first mark எடுத்து டாக்டராகி,மக்களுக்கு சேவை செய்வேன் என்று சொன்ன பல பேர் என்ன ஆனார்கள்??.

IAS exam எழுதி பாஸ் செய்தவர்கள், செய்தி தாள்களில் மக்களுக்கு சேவை செய்வேன் என்று சொன்ன பல பேர் அவ்வாறாக செய்துள்ளார்களா???


இதில் 70% சதவீதம் பேர் கால ஓட்டத்தில் காணாமல் போனாவர்கள் தான்.

ஏன் இவ்வாறு நடக்கிறது, கால வெள்ள ஓட்டத்தில் தன்னை நிலை நிறுத்தியவர்கள் வெகு சிலரே

வாழ்க்கையில் ஒரு தடவை ஜெயிப்ப்து எளிது,வாழ்க்கை முழுவதும் ஜெயித்து கொண்டே இருப்பது மிக அரிது.

இதில் யார் மீது குற்றம்,விதியின் மீது பழி போட என் மனசு
ஒத்துகொள்ளவில்லை.


பதிவுல நண்பர்களே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

6 comments:

 1. என்னுடைய எண்ணம் என்னவென்றால் சிலரால்தான் அவர்கள் வாழ்க்கை பாதையை தீர்மானித்து அதில் செல்ல முடிகிறது
  மீதிபேரால் வாழ்க்கை எந்த பாதையில் செல்கிறதோ அதன் போக்கிலே செல்கிறார்கள்

  ReplyDelete
 2. தன்னம்பிக்கை, நேர்வழி முக்கியம்

  ReplyDelete
 3. குறிக்கோளை நோக்கிய வழிமாறாத பயணமே வெற்றி என்னும் இலக்கை எட்ட வைக்கும்.

  ReplyDelete
 4. Kanamal pogavillai .. pogavendiya nirpantham..
  Any way Superb...

  ReplyDelete
 5. கைவரிசையை காட்ட மறுபடியும் வருவேன்.

  ReplyDelete
 6. நட்சத்திர வாரத்தில் இதன் பாதிப்பில் ஈக்கள் மொய்க்கும் உலகத்தில் வந்துள்ள தமிழ் உதயம் விமர்சனத்தை படித்துப் பாருங்கள். நன்றி நண்பா.

  ReplyDelete