Monday, February 21, 2011

வாக்காள பெருமக்களே

தமிழக தேர்தல் நெருங்கிகொண்டிருக்கிறது, இன்னும் சில வாரங்களில் கட்சிகளிடையே கூட்டணி பேச்சு வார்தை முடிந்து விடும்.தொகுதியில் நல்ல செல்வாக்கு உள்ளவர்(மக்கள் செல்வாக்கு இல்ல) வைட்டமின் 'ப' (பணம்) வைத்திருப்போர், தொகுதியில் தேர்தல் நேரத்தில் மட்டும் 50 லட்சம் மேல் செலவு செய்ய முடிந்தவருக்கு சீட் கிடைக்கும்.இனி வாக்காள பெரு மக்களே நம்ம காட்டில் நல்ல மழை பெய்யும்.

1.பழைய/புதிய MLA/MP,சில சினிமா/டீவி நடிகர்கள்,நடிகைகளை காணும் வாய்ப்பு கிடைக்கும்.(நல்ல புது கவர்ச்சி நடிகையை பார்த்து வர சொல்லுங்கப்பா).

2. தேர்தல் நேரத்தில் பல திருமண மண்டபங்கள் நிரம்பி வழியும் திருமணங்கள்,பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடக்கும்,மக்களுக்கு திகட்ட திகட்ட பிரியாணி விருந்து கிடைக்கும்.
(ஹைதராபாத் பிரியாணி, மொகல் பிரியாணி, அட நம்ம திண்டுக்கல் தலப்பா கட்டு பிரியாணி என வித விதமா கேட்டு வாங்கி சாப்பிடுங்கள் மக்களே--மதுரை 'திருமங்கலம்' பார்முலா)

3.ஆம்புலன்சில்/கண்டெய்ன்ரில்,கட்டுக்கட்டாக பணம் எடுத்துச் செல்லபடும்.(யாரு கண்டா சைக்களில் மூட்டையாய் இல்ல பெட்டியாய் கூட நம்ம காந்தி தாத்தா travel பன்னுவாரு)

4.வாக்காள மக்கள் போதையில் மூழ்கி திழைக்க ஒவ்வொரு அரசியல் கூட்டத்திற்க்கும் 'மது' இலவசமாக வழங்கப்படும்.(டாஸ்மாக் சரக்கு வேண்டாம் மக்களே,நல்ல பாரின் சரக்கா கேளுங்க கட்டாயம் தருவார்கள்).

5.லட்டுக்குள் கம்மல் இருக்கும்,மிக்சருக்குள் மோதிரம் இருக்கும்,மொபைல் போன் தானா ரீசார்ஜ் ஆகும்,சிலருக்கு புது மொபைலே கிடைக்கும்.(கம்மல்,மோதிரம் இதல்லாம் காதுல, கையில போட்ட நமக்கு அசிங்கமாருக்கும் அதனால் உள்ள வாங்கி வெளியில வித்திட வேண்டியதுதான்.)

6.மிக்சி,கிரைண்டருன்னு பரிசு பொருட்கள் உங்களை தேடிவரும்.நல்ல ஐடியாவ இருக்கே தேர்தலில் ஜெயிச்சா மிக்சி,கிரைண்டர் இலவசம்ன்னு யாரவது சொல்லுங்கடா)

7.அட முக்கியமா காந்தி சிரிக்கும் பல நோட்டுகள் உங்க வீடு தேடி வரும்(உங்க வீடு தேடி வரும் லட்சுமிய வேணானுன்னு சொல்லாதிங்க).

8.பூத்தில் வேலை பார்க்க போகும் அரசாங்க அதிகாரிக்கு நல்ல காலம் பொறந்துடுச்சுடோய்!!!இவர்கள் சாதி மதம் பேதம் பார்க்காமல் அனைத்து கட்சிகளாலும் நன்றாக கவனிக்கப்படுவார்கள்.(வர காசுல வெயிலுக்கு இதமா ஒரு split AC வாங்கி வீட்டுல மாட்டுங்க officer )

9.குடிநீர்,சாலை,பஸ்வசதி,சுகாதாரம் பற்றிய வாக்குருதிகள் வழக்கம் போல் அள்ளி வழங்கபபடும்(எவனுக்கு டா வேணும் நமக்கு சரக்கும்,பிரியாணியும் வந்துச்சா நடய கட்டு)

10.கறை வேட்டி கட்டி கட்சி பெயர சொல்லி போலிஸ் முன்னடி நல்ல அலம்பலாம் (போலிஸ் மாமா முன்னாடி குத்தாட்டம் போடுறதுக்கு இதுதான் நல்ல டைம்).

11.கட்சி கூட்டத்திற்கு,வாழ்த்து கோசம் போடுறதுக்கு நிறைய ஆள் தேவைப்படும்(நம்மகிட்ட நல்ல வெள்ள வேட்டி,சட்டை இருந்த போதும், கட்சி வேட்பாளர பொருத்து நமக்கு 500,1000 கிடைக்கும்)

24 comments:

 1. //.லட்டுக்குள் கம்மல் இருக்கும்,மிக்சருக்குள் மோதிரம் இருக்கும்,மொபைல் போன் தானா ரீசார்ஜ் ஆகும்,சிலருக்கு புது மொபைலே கிடைக்கும்.(கம்மல்,மோதிரம் இதல்லாம் காதுல, கையில போட்ட நமக்கு அசிங்கமாருக்கும் அதனால் உள்ள வாங்கி வெளியில வித்திட வேண்டியதுதான்.)//

  இது புதுசா இருக்கே .. உங்களோட திட்டமா ? ஹி ஹி

  ReplyDelete
 2. //கட்சி கூட்டத்திற்கு,வாழ்த்து கோசம் போடுறதுக்கு நிறைய ஆள் தேவைப்படும்(நம்மகிட்ட நல்ல வெள்ள வேட்டி,சட்டை இருந்த போதும், கட்சி வேட்பாளர பொருத்து நமக்கு 500,1000 கிடைக்கும்)///

  அத விட அதிகமா குடுக்க மாட்டாங்களா ?

  ReplyDelete
 3. செல்வா யாருமே இல்லதா கடையில் வந்து வடை வாங்குறேயே.... நீ 2 நாள் கழிச்சு வந்தா கூட ஈசியா வடை வாங்கலாம்...

  ReplyDelete
 4. லட்டுக்குள் கம்மல் இருக்கும்,மிக்சருக்குள் மோதிரம் இருக்கும்,மொபைல் போன் தானா ரீசார்ஜ் ஆகும்,சிலருக்கு புது மொபைலே கிடைக்கும்.(கம்மல்,மோதிரம் இதல்லாம் காதுல, கையில போட்ட நமக்கு அசிங்கமாருக்கும் அதனால் உள்ள வாங்கி வெளியில வித்திட வேண்டியதுதான்.)//

  இது எல்லாம் மதுரை திருமங்கலம் இடைத்தேர்தல நடந்தது

  ReplyDelete
 5. ப்ளாக்கு புல்லா கரையான் அரிச்சுக் கெடக்கு... மொதல்ல தூசி தட்டுங்கப்பா..........

  ReplyDelete
 6. ///////தொகுதியில் தேர்தல் நேரத்தில் மட்டும் 50 லட்சம் மேல் செலவு செய்ய முடிந்தவருக்கு சீட் கிடைக்கும்.////////

  போன எலக்சன்லேயே 1C ய தாண்டிருச்சாமே?

  ReplyDelete
 7. //////1.பழைய/புதிய MLA/MP,சில சினிமா/டீவி நடிகர்கள்,நடிகைகளை காணும் வாய்ப்பு கிடைக்கும்.நல்ல புது கவர்ச்சி நடிகையை பார்த்து வர சொல்லுங்கப்பா).//////

  இந்த ரணகளத்துலேயும் ஒரு கிளுகிளுப்பு கேக்குது?

  ReplyDelete
 8. //////3.ஆம்புலன்சில்/கண்டெய்ன்ரில்,கட்டுக்கட்டாக பணம் எடுத்துச் செல்லபடும்.யாரு கண்டா சைக்களில் மூட்டையாய் இல்ல பெட்டியாய் கூட நம்ம காந்தி தாத்தா travel பன்னுவாரு)///////

  இந்த மாதிரி வண்டிய தள்ளிக்கிட்டு வர முடியுமான்னு பாருய்யா...............

  ReplyDelete
 9. ////////10.கறை வேட்டி கட்டி கட்சி பெயர சொல்லி போலிஸ் முன்னடி நல்ல அலம்பலாம் (போலிஸ் மாமா முன்னாடி குத்தாட்டம் போடுறதுக்கு இதுதான் நல்ல டைம்).////////

  பாத்து மச்சி, அப்புறம் நோட் பண்ணி வெச்சி எலக்சன் முடிஞ்சப்புறம் காய்ச்சிட போறானுங்க................

  ReplyDelete
 10. /////11.கட்சி கூட்டத்திற்கு,வாழ்த்து கோசம் போடுறதுக்கு நிறைய ஆள் தேவைப்படும்(நம்மகிட்ட நல்ல வெள்ள வேட்டி,சட்டை இருந்த போதும், கட்சி வேட்பாளர பொருத்து நமக்கு 500,1000 கிடைக்கும்) ////////

  பேசாம ஒரு மாசம் லீவு போட்டுட்டு இறங்குனோம்னா நல்லா தேறும்போல?

  ReplyDelete
 11. போட்டு தாக்குலே மக்கா...

  ReplyDelete
 12. லட்டுக்குள் கம்மல் இருக்கும்,மிக்சருக்குள் மோதிரம் இருக்கும்,மொபைல் போன் தானா ரீசார்ஜ் ஆகும்,சிலருக்கு புது மொபைலே கிடைக்கும்.(கம்மல்,மோதிரம் இதல்லாம் காதுல, கையில போட்ட நமக்கு அசிங்கமாருக்கும் அதனால் உள்ள வாங்கி வெளியில வித்திட வேண்டியதுதான்.)


  ....good idea!!!!! ஆரம்பமே களை கட்டியிருச்சே!

  ReplyDelete
 13. ...good idea!!!!! ஆரம்பமே களை கட்டியிருச்சே!

  வாங்க மேடம் ....
  ஏதோ எங்க பொழப்பு இப்படி போகுது

  ReplyDelete
 14. வந்துட்டேன் ராசா!

  ReplyDelete
 15. ஓட்டு பட்டைய காணோம்!

  ReplyDelete
 16. பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..! தொடருங்கள்........

  :))

  ReplyDelete
 17. மொக்க...மொக்க...மொக்கராசா!!!

  ReplyDelete
 18. உங்க மெயில் ஐ.டி. தாங்க.

  ReplyDelete
 19. என் வலைப்பூவில் வந்து கேட்ட கேள்விக்கு பதிலனுப்ப.

  ReplyDelete
 20. //என் வலைப்பூவில் வந்து கேட்ட கேள்விக்கு பதிலனுப்ப.
  sansaravanakumar@gmail.com

  ReplyDelete
 21. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

  http://otti.makkalsanthai.com/upcoming.php

  பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

  ReplyDelete